லக்னோ,
இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஜாகுவார் ரக விமானம் தன்னுடைய வழக்கமான பணிக்காக கோரக்பூரில் இருந்து புறப்பட்டு சென்ற போது குஷிநகரில் விழுந்து விபத்துக்குள்ளானது. காஸ்யா கிராமத்தில் விபத்தில் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் விமானத்திலிருந்த விமானி பத்திரமாக உயிர் தப்பினார் என விமானப்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.