தேசிய செய்திகள்

மத்திய, மாநில அரசுகளை விமர்சித்து சமூகவலைதளத்தில் வீடியோ வெளியிட்டவருக்கு ஜெயில்

மத்திய, மாநில அரசுகளை விமர்சித்து சமூகவலைதளத்தில் வீடியோ வெளியிட்டவருக்கு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

இம்பால்,

சுதந்திர போராட்ட வீராங்கனை ஜான்சிராணியின் பிறந்த நாள் கடந்த மாதம் (நவம்பர் ) 19-ந்தேதி மணிப்பூர் மாநிலத்தில் கொண்டாடப்பட்டது. இதுதொடர்பாக மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த பத்திரிகையாளர் கிஷோர்சந்த் என்பவர் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், ஜான்சிராணி மணிப்பூருக்கு எந்த நன்மையையும் செய்யவில்லை. ஆனால் மத்திய அரசின் அறிவுறுத்தலுக்கு இணங்க மாநில அரசு அவரது பிறந்தநாளை கொண்டாடுகிறது என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதனையடுத்து கிஷோர்சந்தை மணிப்பூர் போலீசார் கடந்த மாதம் கைது செய்தனர். அடிப்படை ஆதாரங்கள் இருப்பதால் அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய கவர்னர் நஜ்மா ஹெப்துல்லா அனுமதி வழங்கினார். இதனையடுத்து மாநில உள்துறை அமைச்சகம் அளித்த அறிக்கையின்படி, கிஷோர்சந்துக்கு ஓராண்டு ஜெயில் தண்டனை விதித்து மணிப்பூர் கோர்ட்டு உத்தரவிட்டது.


ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு