தேசிய செய்திகள்

ஜெய்ப்பூர் துப்பாக்கிச்சூடு-இறந்த ஆர்.பி.எப். அதிகாரிக்கு ரூ.15 லட்சம் நிதி..!

துப்பாக்கிச்சூட்டில் இறந்த ஆர்.பி.எப். அதிகாரியின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் நிதி வழங்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது

தினத்தந்தி

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து மராட்டியம் நோக்கி எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று வந்து கொண்டிருந்தது. மராட்டியத்தின் பஹல்கர் மாவட்ட ரெயில் நிலையம் அருகே ரெயில் வந்தது. அப்போது, ரெயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த ஆர்.பி.எப். அதிகாரி, தான் வைத்திருந்த துப்பாக்கியால் சக அதிகாரி மற்றும் பயணிகள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினார்.

ஓடும் ரெயிலில் ஆர்.பி.எப். அதிகாரி துப்பாக்கிச்சூடு நடத்தியதால் அதிர்ச்சியடைந்த சக பயணிகள் அலறியடித்து ஓடினர். ஆனால் தொடர்ந்து அந்த அதிகாரி துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் சக ஆர்.பி.எப். அதிகாரி, 3 பயணிகள் என மொத்தம் 4 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் துப்பாக்கிச்சூட்டில் இறந்த அதிகாரியின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் நிதி வழங்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் அதிகாரியின் இறுதிச்சடங்கிற்கு ரூ.20 ஆயிரம் மற்றும் பொது காப்பீட்டு தொகையாக ரூ.65 ஆயிரம் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு