தேசிய செய்திகள்

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வரும் 24 ஆம் தேதி அமெரிக்கா பயணம்

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வருகின்ற 24ஆம் தேதி அமெரிக்கா பயணம் மேற்கொள்கிறார்.

புதுடெல்லி,

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வருகின்ற 24-ஆம் தேதி அமெரிக்கா செல்கிறார். மே 24 முதல் 28 ஆம் தேதி வரை என அமெரிக்காவில் ஜெய்சங்கர் 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

இந்த சுற்றுப்பயணத்தின் போது, கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பல்வேறு அமெரிக்க நிறுவனங்களுடன் அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாகவும், இந்தியாவில் தடை இன்றி தடுப்பூசி கிடைப்பதற்காக இந்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.