புதுடெல்லி
அடுத்த மூன்று மாதத்தில் பதினேழு வயதிற்கு குறைவான பிஃபா கால்பந்து விளையாட்டுகள் இந்தியாவில் நடைபெறவுள்ள நிலையில் அமைச்சர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
அவ்வாறு நடத்துவதால் நமது நாடு உலகளவில் கால்பந்து விளையாட்டில் ஈடுபடும் நாடுகளுடன் இணைந்து கொள்ளவும் கால்பந்து புகழில் பங்கு கொள்ளவும் முடியும் என்றார் அமைச்சர்.
டெல்லியில் நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டியின் இறுதியாட்ட நிகழ்சியில் பங்கேற்கும் போது அவர் இவ்வாறு கூறினார்.
நாம் உலகளவில் கால்பந்து தர வரிசையில் நல்ல நிலையில் இருந்தாலும், இன்னும் நீண்ட தூரம் கடக்க வேண்டும். உலகளவில் கால்பந்து பிரபலமாகி வரும் நிலையில் இந்தியாவில் கால்பந்து போட்டிகள் நடந்தால் உலகளவில் நாம் இணைந்து கொள்ள முடியும் என்றார் ஜெட்லி.
பிஃபா போட்டி அக்டோபர் மாதத்தில் துவங்கவுள்ளது.