தேசிய செய்திகள்

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் : இந்திய வீரர் உயிரிழப்பு

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அத்துமீறிய தாக்குதலில் இந்திய வீரர் உயிரிழந்தார்.

ஸ்ரீநகர்,

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் ராணுவம் வாடிக்கையாகக் கொண்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறிய செயலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலுக்கு இந்தியா தொடர்ந்து தனது எதிர்ப்பை தூதரக மட்டத்திலும் பதிவு செய்து வருகிறது.

எனினும், பாகிஸ்தானின் திருந்தியபாடில்லை. அந்த வகையில், பூஞ்ச் மாவட்டத்தின் பாலகோட் செக்டாரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் பலியாகினார். பாகிஸ்தானின் இந்த அத்துமீறலுக்கு இந்தியாவும் தக்க பதிலடி கொடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் உயிர்சேதம் எதுவும் ஏற்பட்டதா? என்பது குறித்து தற்போது வரை எந்தத் தகவலும் இல்லை.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு