தேசிய செய்திகள்

ஜம்மு-காஷ்மீரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

ஜம்மு-காஷ்மீரில் இந்த ஆண்டு (2019) இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

ஜம்மு-காஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கட்சி-பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. இரு கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக பா.ஜனதா தனது ஆதரவை கடந்த ஆண்டு விலக்கிக் கொண்டது. இதையடுத்து, மெகபூபா முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகினார். அதைத்தொடர்ந்து, மாநில சட்டசபை முடக்கப்பட்டு 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் ஆளுநர் ஆட்சி பிரகடனம் செய்யப்பட்டது.

இந்நிலையில், காஷ்மீரில் இந்த ஆண்டு (2019) இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. அமர்நாத் யாத்திரை முடிந்த பிறகு தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் எனவும் தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு