தேசிய செய்திகள்

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தினத்தந்தி

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவின் சோபூரில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனைதொடர்ந்து இன்று அதிகாலை அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர்.

இருதரப்பினருக்கும் இடையில் தொடர்ந்து நீடித்து வரும் துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், கொல்லப்பட்ட 2 பயங்கரவாதிகளிடம் இருந்து ஆயுதங்கள், வெடிபொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து தெற்கு காஷ்மீர் பகுதி டிஐஜி அதுல் குமார் கோயல் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தைசேர்ந்த இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தில் ராணுவ வீரர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பாதிப்பில்லை. கொல்லப்பட்டவர்கள் குறித்து அடையாளம் காணப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்