தேசிய செய்திகள்

இந்திய ராணுவ வீரரை சுட்டுக்கொன்ற பயங்கரவாதி அதிரடி கைது - காஷ்மீர் போலீசார் தகவல்!!

சோபியான் சோட்டிபோரா கிராமத்தில் விடுமுறைக்காக சென்றிருந்த ஒரு சி.ஆர்.பி.எப் வீரர் மீது நேற்று தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காஷ்மீரின் குப்வாரா பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, பாதுகாப்பு படையினர், காஷ்மீர் போலீசாருடன் இணைந்து குப்வாரா என்ற பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தியபோது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்த தாக்குதலையடுத்து அப்பகுதியை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினரும் பதிலடி தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதல் சம்பவத்தில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான் என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக, சோபியான் சோட்டிபோரா கிராமத்தில் விடுமுறைக்காக சென்றிருந்த முக்தர் அகமது தோஹி என்ற ஒரு சி.ஆர்.பி.எப் வீரர் மீது நேற்று தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த அந்த வீரர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் வீரமரணம் அடைந்தார்.

இந்த சம்பவத்தையடுத்து, பாதுகாப்பு படையினர் அப்பகுதியை சுற்றி வளைத்தனர். அவர்கள் நடத்திய தேடுதல் வேட்டையில், கொலையாளியை இன்று கைது செய்தனர். மேலும், இந்த பயங்கரவாதக் குற்றச் செயல்களின் போது அவனுடன் இருந்த தொழிலாளி ஒருவனும் கைது செய்யப்பட்டான்.

லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் கமாண்டர் அபித் ரம்ஜான் ஷேக்கின் வழிகாட்டுதலின் பேரில் இந்த பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது என்று ஜம்மு காஷ்மீர் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு