தேசிய செய்திகள்

ஜம்மு-காஷ்மீர்: பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் - 2 ராணுவ வீரர்கள் பலி, 2 பேர் காயம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் இரண்டு ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லையில் உள்ள ராஜோரி மாவட்டத்தில், நவ்ஷேரா செக்டாரில் உள்ள லாம் பகுதியில் ராணுவ வீரர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் சிலர், ராணுவ வீரர்களை குறிவைத்து வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ராணுவ மேஜர் உள்பட 2 வீரர்கள் பலியாகினர். மேலும் இரண்டு வீரர்கள் காயமடைந்தனர். பயங்கரவாதிகள் தாக்குதலை தொடர்ந்து அந்த பகுதி தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...