தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீர்; என்கவுண்டரில் ராணுவ வீரர் ஒருவர் வீர மரணம்

ஜம்மு காஷ்மீரில் சோபார் மாவட்டத்தில் நடைபெற்ற என்கவுண்டரில் ராணுவ வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார்.

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரின் சோபோர் மாவட்டத்தில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.

இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதேவேளையில், ராணுவ வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார். இரு தரப்பினருக்கும் இடையே தொடர்ந்து துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT