கோப்புப்படம் ANI  
தேசிய செய்திகள்

உதம்பூரில் நிலச்சரிவு - ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடல்

உதம்பூரில் உள்ள தேவால் பாலத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதால் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது.

தினத்தந்தி

ஸ்ரீநகர்,

உதம்பூரில் உள்ள தேவால் பாலத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதால் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது. மக்கள் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்க வேண்டாம் என்று ஜம்மு காஷ்மீர் போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ஜம்மு காஷ்மீர் போக்குவரத்து போலீசார் டுவிட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், தேவால் பாலம் அருகே பெரிய கற்கள் சரிந்து ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் இருபக்கத்திலும் சேதப்படுத்தியிருப்பதால் அனைத்து வகை வாகனங்களின் இயக்கமும் நிறுத்தப்பட்டுள்ளது.

போக்குவரத்து கட்டுப்பாட்டு பிரிவுகளின் உறுதிப்படுத்தல் இல்லாமல் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் பயணிக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் இன்று வெளியிட்டுள்ள பதிவில், ஜம்மு ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை இன்னும் மூடப்பட்டுள்ளது. முகலாய சாலை மற்றும் எஸ்.எஸ்.ஜி சாலை வழியாக போக்குவரத்துக்கு மாற்றப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து