தேசிய செய்திகள்

நிலச்சரிவால் ஜம்மு -ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடல்: ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிப்பு

நிலச்சரிவால் ஜம்மு -ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது. இதனால், ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர்.

தினத்தந்தி

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ராம்பன் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக, ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை மீண்டும் மூடப்பட்டது. இது குறித்து அங்குள்ள அதிகாரிகள் கூறியதாவது:- ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் ராம்பன் மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை மூடப்பட்டது. இதன் காரணமாக அந்த நெடுஞ்சாலையில் 1,500க்கும் மேற்பட்ட வாகனங்கள் சிக்கியுள்ளன.

தகவலின்பேரில் நிலச்சரிவினால் சாலையில் கிடக்கும் கற்கள் உள்ளிட்டவற்றை அப்புறப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணி முடிவடையும் வரையில், ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் வாகனம் எதுவும் அனுமதிக்கப்பட மாட்டாது.

ஏற்கெனவே நிலச்சரிவின் காரணமாக, ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை கடந்த 9-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை மூடப்பட்டது. பின்னர் அந்த சாலையில் சிக்கியிருந்த வாகனங்கள் மட்டும் வெளியேற வசதியாக, ஒரு வழி போக்குவரத்துக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்