ஸ்ரீநகர்,
காஷ்மீரைச் சேர்ந்த 6 வயது சிறுமி, நீண்டநேரம் ஆன்லைன் வகுப்பு நடப்பதாக வீடியோ மூலம் பிரதமர் மோடியிடம் புகார் அளித்தார்.
அதைத் தொடர்ந்து பள்ளிக் குழந்தைகளுக்கான பாடச்சுமையைக் குறைக்க 48 மணி நேரத்தில் கொள்கை வகுக்கப்படும் என்று ஜம்மு காஷ்மீர் துணைநிலை கவர்னர் மனோஜ் சின்கா உறுதி அளித்தார்.
இந்நிலையில் தினசரி ஆன்லைன் வகுப்புகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மாநில நிர்வாகம் நேற்று வெளியிட்டது. அதன்படி தொடக்கக்கல்விக்கு முந்தைய வகுப்பு மாணவர்களுக்கு தினமும் அரை மணி நேரமும், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு ஒன்றரை மணி நேரமும், 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 3 மணி நேரத்துக்கு மிகாமலும் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.