தேசிய செய்திகள்

அரியானாவில் திடீர் திருப்பம்: ஆட்சி அமைப்பது யார்? அடுத்த முதல்வர் யார்?

அரியானாவில் 90 தொகுதிகளின் முன்னிலை நிலவரம் வெளியாகியுள்ள நிலையில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை.

தினத்தந்தி

புதுடெல்லி,

அரியானா சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், மாநிலம் தொங்கு சட்டமன்றத்தை நோக்கிச் செல்வதாகத் தெரிகிறது. அரியானாவில் பாஜக - காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஆளும் பாஜக 41 இடங்களிலும் காங்கிரஸ் 31 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. ஜனநாயக ஜனதா கட்சி 10 இடங்களில் முன்னிலையில் உள்ளது. மற்றவர்கள் 8 இடங்களிலும் முன்னிலை பெற்று உள்ளனர். எளிதில் ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட பாஜகவுக்கு தற்போது சிக்கல் உருவாகியுள்ளது. கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

பின்னடைவு காரணமாக தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொண்டு அரியானா பாஜக தலைவர் சுபாஷ் பராலா பதவி விலகி உள்ளார்.

காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, அரியானா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடாவுடன் பேசியதாகவும், சாத்தியமான கூட்டணி கட்சிகளை ஆட்சி அமைக்க சேர்த்து கொள்ள அவருக்கு முழு சுதந்திரம் வழங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஜனநாயக ஜனதா கட்சி தலைவர் துஷ்யந்த் சவுதலா, இந்திய தேசிய லோக்தள கட்சியின் தலைவர் ஓம் பிரகாஷ் சவுதாலாவின் பேரனாவார். குடும்ப சண்டையில் இந்திய தேசிய லோக்தள கட்சியில் இருந்து வெளியேறிய துஷ்யந்த் ஓராண்டுக்கு முன்பாக ஜனநாயக ஜனதா கட்சியை தொடங்கினார். தற்போது அவரது பாரம்பரிய குடும்ப கட்சியான லோக்தளத்தை விடவும், அதிக இடங்களில் துஷ்யந்தின் கட்சி முன்னிலை வகித்து வருகிறது.

மூன்றாவது பெரிய கட்சியாக ஜனநாயக ஜனதா கட்சி உருவெடுக்கும் சூழல் உள்ளதால் துஷ்யந்துடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான பூபந்திர ஹூடா, துஷ்யந்த் சவுதாலாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும், இன்று மாலை நேரில் சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

வேறுபாடு அதிகமாக இருந்தால், துஷ்யந்த் சவுதாலா தலைமையிலான ஜனநாயக ஜனதா கட்சி (ஜே.ஜே.பி) மாநிலத்தின் கிங்மேக்கராக மாறி உள்ளது.

பாஜகவும் ஜனநாயக ஜனதா கட்சியின் ஆதரவை கேட்கும் என கூறப்படுகிறது.

இது குறித்து துஷ்யந்த் சவுதாலா கூறும்போது, ஆரம்ப போக்குகள் ஜனநாயக ஜனதா கட்சி எதிர்பார்த்தது போல் இருக்கிறது என்பதைக் குறிக்கிறது. ஆனால் நாங்கள் எதற்கும் உறுதியளிக்க மாட்டோம். மதியம் 3 மணி வரை நாங்கள் காத்திருந்து பார்ப்போம், முழு தேர்தல் முடிவுகளும் வந்த பிறகுதான் முடிவு செய்வோம் என கூறினார்.

பத்ரா சட்டசபை தொகுதியில் போட்டியிடும் துஷ்யந்த் சவுதாலா முன்னிலையில் உள்ளார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்