ஸ்ரீநகர்,
தீவிரவாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை புனித ரமலான் மாதத்தில் நிறுத்தி வைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இந்த நிலையில், தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கக்கபோரா பகுதியில் ராஷ்டீரிய ரைபிள்ஸ் படை வீரர்கள் 50 பேர் முகாம் ஒன்றில் தங்கி இருந்தனர்.
இந்த பகுதியில் தீவிரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்து காணப்படுகிறது. அவர்களில் சிலர் முகாம் மீது நேற்றிரவு திடீர் தாக்குதலை நடத்தி உள்ளனர். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினால் பதிலடியாக தாக்குதல் நடத்துவதற்கு பாதுகாப்பு படையினருக்கு அதிகாரமளிக்கப்பட்டு இருந்தது.
இதனால் தீவிரவாதிகளுக்கு எதிராக ராணுவ வீரர்கள் பதிலடி தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினருக்கு இடையேயான தாக்குதலில் பிலால் அகமது என்ற நபர் சிக்கி காயமடைந்து உள்ளார்.
இதேபோன்று தீவிரவாதிகளின் தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவரும் காயமடைந்து உள்ளார். இருவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் 2 பேரும் உயிரிழந்து விட்டனர்.
இதனை தொடர்ந்து புல்வாமா மாவட்டத்தின் சில பகுதிகளில் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன.