புதுடெல்லி
தமிழக சட்டப் பேரவைத் தலைவர் தனபால் 18 அதிமுக உறுப்பினர்களின் பதவியை பறித்த முடிவை சுட்டிக்காட்டி கோரிக்கையை விடுத்துள்ளது.
ஜனதாதளத்தின் செய்தித்தொடர்பாளர் கே சி தியாகி கூறுகையில் அதிமுகவின் உறுப்பினர்கள் போல் சரத் யாதவ்வும், அலி அன்வரும் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டினார். இதனால் இருவரின் பதவியை பறிக்கும்படி மாநிலங்களவையின் தலைவரும், துணைக்குடியரசுத் தலைவருமான வெங்கய்யா நாயுடுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் இருவரும் கட்சியின் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக பதில் கூறும்படி கூடுதலாக ஒரு வார காலம் அவகாசம் கொடுத்துள்ளது.
சரத் யாதவ்விற்கும், அலி அன்வருக்கும் ஆதரவாக எதிர்க்கட்சித் தலைவர்கள் பேசியதற்கும், முடிவை ஒழுங்கு நடவடிக்கைக்குழுவிற்கு அனுப்பும்படியும் கோரிக்கை விடுத்துள்ளது சரியல்ல என்றும் தியாகி கூறினார். இது போன்ற அரசியலமைப்பு தொடர்பான விஷயங்களில் வெளியாட்கள் கருத்து கூறுவது பொருத்தமானதல்ல என்றும் தியாகி கூறினார்.
அதிமுக உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டது அரசியலமைப்புச் சட்டத்தின் 10 ஆவது ஷெட்யூலில் (சட்டப்பிரிவு 102(2) மற்றும் 192 (2) படி கொடுக்கப்பட்டுள்ள விரிவான அதிகாரங்களை எடுத்துக்காடுவதாகவே உள்ளது என்று தியாகி குறிப்பிட்டார். கட்சியின் உறுப்பினர் பதவியை தானாகவே விட்டுக்கொடுத்த மக்கள் பிரதிநிதிகளின் பதவியை பறிப்பதற்கு சபாநாயகருக்கு அப்பிரிவு அதிகாரம் கொடுக்கிறது என்று தியாகி குறிப்பிட்டார்.
அதிமுக பேரவை உறுப்பினர்களும், சரத் யாதவ் மற்றும் அன்வர் அலி ஆகிய இரு உறுப்பினர்களும் ஒரே நிலையில் இருப்பதாக சுட்டிக்காட்டிய தியாகி சரத் யாதவ்வை லூலு கட்சி கூட்டிய பேரணியில் கலந்து கொள்ள வேண்டாம் என்று ஐக்கிய ஜனதாதளம் எச்சரித்தையும் அப்படி செய்வது கட்சி உறுப்பினர் பதவியை விட்டுக்கொடுப்பதாகவே கருதப்படும் என்று கூறியதையும் நினைவு கூர்ந்தார். 2016 ஆம் ஆண்டில் உத்தரகாண்ட் பேரவையில் ஒன்பது கிளர்ச்சி உறுப்பினர்களை பேரவைத் தலைவர் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி பதவி நீக்கம் செய்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.