தேசிய செய்திகள்

ஜே.இ.இ., முதன்மை தேர்வுக்கான தேதி மற்றும் ஐஐடி தகுதிப் பட்டியல் இன்று வெளியிடப்படும் - மத்திய மந்திரி ரமேஷ் பொக்ரியால்

ஜே.இ.இ., முதன்மை தேர்வுக்கான தேதி மற்றும் ஐஐடி தகுதிப் பட்டியல் ஜன.7ஆம் தேதி (இன்று) மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்று மத்திய மந்திரி ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சேர ஜேஇஇ நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இவை ஜேஇஇ மெயின், ஜேஇஇ அட்வான்ஸ்டு என இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகின்றன. மேற்குறிப்பிட்ட கல்வி நிறுவனங்களில் சேர ஜேஇஇ தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம்.

இந்த ஆண்டு ஜேஇஇ மெயின் 2021 தேர்வு ஆண்டுக்கு 4 முறை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக பிப்ரவரி மாதம் 23 முதல் 26ஆம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களிலும் ஜேஇஇ மெயின் 2021 தேர்வு நடைபெறும்.

இந்த நிலையில் 2021 ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுகள் தொடங்கும் தேதிகளை ஜனவரி 7-ம் தேதி (அதாவது இன்று) மாலை ஆறு மணிக்கு வெபினார் நிகழ்ச்சியில் அறிவிக்க உள்ளதாக மத்தியக் கல்வி மந்திரி ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். இந்த வெபினார் நேரலை நிகழ்ச்சி மந்திரியின் டுவிட்டர் மற்றும் முகநூல் பக்கத்தில் ஒளிபரப்பப்பட உள்ளது. இதனை மந்திரி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

எத்தனை முறை ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுகளை எழுதலாம், தேர்வுக்கான தகுதி, கால அட்டவணை ஆகியவற்றை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...