தேசிய செய்திகள்

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு அயோத்தியில் தாக்குதல் நடத்த திட்டம்

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு அயோத்தியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளது என உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினத்தந்தி

புதுடெல்லி,

பாகிஸ்தானை இருப்பிடமாக கொண்ட பயங்கரவாத அமைப்பு ஜெய்ஷ்-இ-முகமது. உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள புனித நகரமான அயோத்தி மீது தாக்குதலுக்கு திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சமூக ஊடகத்தின் வாயிலாக அயோத்தியில் உள்ள ராம் ஜன்மபூமி கோவில் மீது தாக்குதல் நடத்துவது குறித்து ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசார் பகிர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது. இது உளவுத்துறையால் இடைமறித்து கேட்கப்பட்டது. உடனடியாக அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களுக்கும் அயோத்தியில் பாதுகாப்பை அதிகரிக்க கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.

ஜெய்ஷ்-இ-முகமதுடன் இணைக்கப்பட்ட நெட்வொர்க்குகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மே 1, 2019 அன்று ஐ.நா.பாதுகாப்பு அமைதிக் குழுவால் மசூத் அசார் உலகளாவிய பயங்கரவாதி என்று அறிவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு