புதுடெல்லி,
81 உறுப்பினர்களை கொண்ட ஜார்கண்ட் மாநில சட்டசபைக்கு இந்த மாதம் 30-ந் தேதி தொடங்கி டிசம்பர் 20-ந் வரை 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் போட்டியிடும் பாரதீய ஜனதா வேட்பாளர்களின் முதல் பட்டியலை அக்கட்சியின் செயல் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பொதுச் செயலாளர் அருண் சிங் நேற்று டெல்லியில் வெளியிட்டார். இந்த பட்டியலில் முதல்-மந்திரி ரகுபர் தாஸ் உள்ளிட்ட 52 வேட்பாளர்களின் பெயர்கள் இடம் பெற்று உள்ளன. ரகுபர் தாஸ் ஜாம்ஷெட்பூர் கிழக்கு தொகுதியில் போட்டிடுவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.