தேசிய செய்திகள்

ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்; 2வது கட்ட ஓட்டு பதிவு தொடங்கியது

ஜார்க்கண்டில் சட்டசபை தேர்தலுக்கான 2வது கட்ட ஓட்டு பதிவு இன்று காலை தொடங்கியது.

தினத்தந்தி

ராஞ்சி,

ஜார்க்கண்ட்டில் மொத்தம் 81 தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு கடந்த நவம்பர் 30 முதல் டிசம்பர் 20 வரை 5 கட்டமாக வாக்கு பதிவுகள் நடைபெறுகின்றன. அனைத்து வாக்குகளும் டிசம்பர் 23ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

முதல் கட்டமாக 13 தொகுதிகளுக்கு வாக்கு பதிவு நடைபெற்றது. சத்ரா, கும்லா, பிஷ்னுபூர், லோகர்தாகா, மணிகா, லதேஹர், பாங்கி, தால்டோகஞ்ச், பிஷ்ராம்பூர், சாதாரோர், ஹூசைனியாபாத், கார்வா மற்றும் பகவந்த்பூர் ஆகிய தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

ஜார்க்கண்டில் ஆளும் பாரதீய ஜனதா முதல் முறையாக கூட்டணி அமைக்காமல் போட்டியிடுகிறது. பாஜகவுக்கு எதிராக ஜே.எம்.எம் கூட்டணி போட்டியிடுகிறது. இந்த கூட்டணியில் காங்கிரஸ், ஆர்.ஜே.டி ஆகிய கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.

இந்நிலையில், இன்று 2வது கட்ட வாக்கு பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கியது முதலே, மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு