தேசிய செய்திகள்

ஜார்கண்ட் சுரங்க விபத்து: பலியானவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்வு

ஜார்கண்ட் சுரங்க விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

தன்பாத்,

ஜார்கண்ட் மாநிலத்தில் கைவிடப்பட்ட நிலக்கரி சுரங்கத்தில் இறங்கிய 10-க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்கள் மண்சரிவு ஏற்பட்டு புதைந்தனர். சட்டவிரோதமாக சுரங்கத்தில் இறங்கியதால் எத்தனை பேர் விபத்தில் சிக்கினார்கள் என்ற விவரம் உறுதியாகதெரியவில்லை.

செவ்வாய்க்கிழமை இரவு வரை 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இந்த நிலையில் சுரங்கத்தில் புதைந்து பலியான மேலும் ஒருவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதனால் இறப்பு எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. கைப்பற்றப்பட்ட உடல்களில் 4 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சுரங்கத்தில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு