தேசிய செய்திகள்

ஜார்க்கண்ட்: திருமணம் நிச்சயிக்கப்பட்ட நபருடன் சென்ற இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை - 5 பேர் கைது

தனது வருங்கால கணவருடன் வெளியே சென்ற பெண்ணை 5 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

தினத்தந்தி

ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்குபம் பகுதியில் உள்ள பரிஜால் என்ற கிராமத்தைச் சேர்ந்த 22 வயதான இளம்பெண், தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நபருடன் சேர்ந்து வெளியே சென்றுள்ளார். அப்போது அவர்கள் இருவரையும் 5 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து தாக்கியதாக கூறப்படுகிறது.

மேலும் அவர்கள் அந்த பெண்ணை தூக்கிச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனிடையே அந்த பெண்ணின் வருங்கால கணவர் அவர்களிடம் இருந்து தப்பிச் சென்று போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார் விரைந்து வந்து பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அந்த பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் கிட்டாகுட்டு என்ற கிராமத்தைச் சேர்ந்த 5 நபர்களை கைது செய்துள்ளனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தனது வருங்கால கணவருடன் வெளியே சென்ற பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து