தேசிய செய்திகள்

ஜார்கண்ட்: கண்ணிவெடியில் சிக்கி பாதுகாப்புப் படைவீரர் பலி

பாபுதேரா-சம்தா பகுதியில் பாதுகாப்புப் படையினர் நக்சலைட்டுகள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

ராஞ்சி,

ஜார்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் ஜரைகேலா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பாபுதேரா-சம்தா பகுதியில் பாதுகாப்புப் படையினர் நக்சலைட்டுகள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்நிலையில் பாதுகாப்புப் படைவீரர் மகேந்திர லஸ்கர் (வயது 45) என்பவர் நக்சலைட்டுகள் மண்ணில் புதைத்து வைத்திருந்த கண்ணிவெடியில் தவறுதலாக மிதித்தார்.

அப்போது கண்ணிவெடி வெடித்து அவர் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக சக வீரர்கள் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதனையடுத்து அங்கு சிகிச்சை பெற்று வந்த மகேந்திர லஸ்கர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து