தேசிய செய்திகள்

இன்ஸ்டா ரீல்ஸ்-காக 100 அடி உயரத்தில் இருந்து ஏரியில் குதித்த இளைஞர் தண்ணீரில் மூழ்கி பலி - வைரல் வீடியோ

இளைஞர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பான முழு நிகழ்வையும் அவரது நண்பர்கள் வீடியோவாக எடுத்துள்ளனர்.

தினத்தந்தி

ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநிலம் சாகிப்கஞ்ச் மாவட்டம் ஜிர்வபரி பகுதியை சேர்ந்த இளைஞர் தஜிப் (வயது 18) இவர் தனது நண்பர்களுடன் நேற்று ஜிர்வபரியில் உள்ள கல்வாரியில் உள்ள ஏரிக்கு குளிக்க சென்றுள்ளார்.

நண்பர்கள் சிலர் ஏரியில் குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் எடுப்பதற்காக தஜிப் 100 அடி உயரத்தில் இருந்து ஏரிக்குள் குதித்துள்ளார். தஜிப் ஏரிக்குள் குதிப்பதை அவரது நண்பர் வீடியோவாக எடுத்துள்ளார்.

சில நண்பர்கள் ஏரியில் குளித்துக்கொண்டிருந்த நிலையில் அவர்களை விட்டு வெகுதொலைவே உள்ள பகுதியில் ஏரிக்குள் தஜிப் குதித்துள்ளார். ஏரியில் குதித்த தஜிப் தண்ணீரில் மூழ்கியுள்ளார்.

தண்ணீரில் மூழ்கிய தஜிப் வெகுநேரமாகியும் மேலே வராததால் அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் நீந்தி சென்று தஜிப்பை தேடியுள்ளார். ஆனால், தஜிப் ஏரியின் ஆழத்தில் மூழ்கி உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து போலீசார் மற்றும் மீட்புக்குழுவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் ஏரியில் மூழ்கிய தஜிப்பின் உடலை மீட்டனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேவேளை, இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிடுவதற்காக 100 அடி உயரத்தில் இருந்து ஏரிக்குள் குதித்த தஜிப் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது