புதுடெல்லி,
இன்று முதல் 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 50 நகரங்களில் ரிலையன்ஸ் ஜியோவின் 5ஜி சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் நாடு முழுவதும் ரிலையன்ஸ் ஜியோவின் 5ஜி சேவைகள், 184 நகரங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 2022 அக்டோபரில் இந்தியாவில் முதல் முறையாக 5ஜி சேவைகள் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த ஆண்டு இறுதியில் இந்தியா முழுவதும் 5ஜி சேவைகள் விரிவுபடுத்தப்படும் என்றும் ஜியோ நிறுவனம் தெரிவித்து உள்ளது.