ஜம்மு,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் கத்துவா நகரில் மல்ஹார் பகுதியில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அது திடீரென பள்ளத்தாக்கு ஒன்றில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் 9 பேர் பலியாகி உள்ளனர். 5 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.