தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீர்: என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்கம் மாவட்டத்தில் உள்ள ரெட்வானி பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இந்த ரகசிய தகவலின் பேரில், அப்பகுதிக்கு விரைந்து பாதுகாப்பு படையினர் ரெட்வானி கிராமத்தை சுற்றி வளைத்தனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப்படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

பாதுகாப்புப்படையினரும் பதிலடி கொடுத்துள்ளனர், சுமார் 3 மணி நேரத்துக்கும் மேல் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, மேலும் அங்கு பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளனரா என தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு