தேசிய செய்திகள்

பிரபல ஆங்கில எழுத்தாளர் அமிதவ் கோசுக்கு ஞானபீட விருது

பிரபல ஆங்கில எழுத்தாளர் அமிதவ் கோஷ் ஞானபீட விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

புதுடெல்லி,

இலக்கியத்துக்கு ஆற்றிய சிறந்த பணியை பாராட்டி வழங்கப்படும் உயரிய இலக்கிய விருதான ஞான பீட விருதுக்கு பிரபல ஆங்கில நாவல் ஆசிரியர் அமிதவ் கோஷ் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். எழுத்தாளர் பிரதிபா ரே தலைமையில் நடைபெற்ற ஞான பீட தேர்வு குழு கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது.

அமிதவ் கோசுக்கு வயது 62. 1956-ம் ஆண்டு கொல்கத்தாவில் ஒரு வங்காள இந்து குடும்பத்தில் பிறந்தார். தற்போது நியூயார்க்கில் வசித்து வருகிறார். டெல்லியிலும் ஆக்ஸ்போர்டு மற்றும் அலெக்சாண்டிரியா பல்கலைக்கழகங்களில் படித்துள்ளார். பத்மஸ்ரீ மற்றும் சாகித்ய அகாடமி விருதுகளை பெற்றுள்ளார்.

இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழிகளில் எழுதும் எந்த ஓர் எழுத்தாளரும் இந்த விருதுக்கு தகுதியானவர் ஆவார். தமிழில் பிரபல எழுத்தாளர்கள் அமரர் அகிலன், ஜெயகாந்தன் ஆகியோர் கடந்த 1975 மற்றும் 2002-ம் ஆண்டுகளில் ஞானபீடம் விருதினை பெற்றனர்.

ஞானபீட விருது பெறுவது குறித்து அமிதவ் கோஷ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.