தேசிய செய்திகள்

ஜே.என்.யூ பல்கலைகழக மாணவர்கள் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு

கல்லூரிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியதால் ஜவஹர்லால் நேரு பல்கலைகழகம் மாணவர்கள் மீது டெல்லி போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

புதுடெல்லி ,

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைகழகம் மாணவர்கள் கடந்த வியாழக்கிழமை அன்று கட்டாய வருகை பதிவேடுகள் மற்றும் அதன் தொடர்பான பிரச்சனைகளை குறித்து விவாதிக்க பல்கலைகழக நிர்வாக வளாகத்திற்கு வந்தனர். அப்போது அவர்களால் துணைவேந்தரை சந்திக்க முடியவில்லை. பின்னர் கட்டித்தின் அனைத்து வாசல் வழியாகவும் வெளியேறி மாணவர்கள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கல்லூரியில் இருந்த மூத்த அதிகாரிகளை வெளியே செல்லாமல் தடுத்து நிறுத்தினர்.

மணிக்கணக்கில் இரண்டு மூத்த அதிகாரிகளை கட்டிடத்தை விட்டு வெளியேராமல் தடுத்ததால் மாணவர்கள் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பல்கலைகழகத்தின் கட்டாய வருகை ஆணையை திரும்ப பெற வலியுறுத்தி நிர்வாக அலுவலகத்திற்கு அருகே சாலை மறியலில் ஈடுபட்டதற்காக மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் எஃப்.ஜ.ஆரில் எத்தனை மாணவர்கள் பெயர் உள்ளது என்பதை போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படவில்லை.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு