தேசிய செய்திகள்

நீதிபதி கர்ணனுக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை ரத்து செய்ய சுப்ரீம் கோர்ட் மறுப்பு

நீதிபதி கர்ணனுக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை ரத்து செய்ய சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்து உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி

கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதி சி.எஸ்.கர்ணன் மீதான கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் அவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மேற்கு வங்க போலீசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இதை தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் நீதிபதி கர்ணனை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கர்ணன் சிறைத்தண்டனையை ரத்து செய்யக்கோரி அவரது சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது

கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு வழங்கப்பட்ட ஆறு மாத சிறைத் தண்டனையை ரத்துசெய்ய சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. 4--வது முறையாக ரத்துசெய்ய மறுத்த சுப்ரீம் கோர்ட் சிறைத் தண்டனையை உறுதிசெய்தது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது