தேசிய செய்திகள்

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பத்திரிக்கையாளர் சந்திப்பு துரதிஷ்டவசமானது முன்னாள் தலைமை நீதிபதி

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசியது துரதிஷ்டவசமானது என முன்னாள் தலைமை நீதிபதி கூறிஉள்ளார். #SupremeCourt #KGBalakrishnan

தினத்தந்தி

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதிகளான செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், குரியன் ஜோசப், மதன் பி லோகூர் ஆகியோர், சுப்ரீம் கோர்ட்டில் நிர்வாகம் சரியாக நடைபெறவில்லை, ஜனநாயகம் இல்லை என கூட்டாக பேட்டியளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தலைமை நீதிபதி திபக் மிஸ்ராவின் மீது 4 மூத்த நீதிபதிகள் குற்றம் சாட்டிய நிலையில் பல்வேறு தரப்பில் அதிர்ச்சியை தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் பேசுகையில், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசியது துரதிஷ்டவசமானது என கூறிஉள்ளார். நீதிபதிகள் அவர்கள் இடையிலான பிரச்சனையை அவர்களே ஆலோசனை செய்து, சரிசெய்துக் கொள்ள வேண்டும். நீதித்துறையானது பொதுமக்களின் புனிதமான இடமாகும். இதுபோன்ற சூழ்நிலைகள் நீதித்துறையின் மீது சந்தேகத்தை தூண்டும், இது நடக்கக்கூடாது என பாலகிருஷ்ணன் பேசிஉள்ளார்.

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பத்திரிக்கையாளர் சந்திப்பை தவிர்த்து இருக்க வேண்டும் என அட்டார்னி ஜெனரல் கூறிஉள்ளார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்