தேசிய செய்திகள்

"நான் கூறியதால் தான் கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டது" -நடிகை சுமலதா

தான் கூறியதால்தான் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதாக முன்னாள் நடிகையும், எம்.பி.யுமான சுமலதா தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

பெங்களூர்,

காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி கடந்த 19-ம் தேதி முதல் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து கர்நாடகா நீர் திறந்து வருகிறது. இந்நிலையில், மாண்டியா தொகுதி எம்பியும், முன்னாள் நடிகையுமான சுமலதா, தனது முகநூலில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங்கிற்கு அணைகளில் நீர் திறக்குமாறு கடிதம் எழுதியதாகவும், அதன் அடிப்படையில்தான் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார். இதற்கு மதச்சார்பற்ற ஜனதாதளம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?