தேசிய செய்திகள்

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக தீபாங்கர் தத்தா பதவியேற்பு

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக தீபாங்கர் தத்தா நேற்று பதவியேற்றுக்கொண்டார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

மும்பை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தீபாங்கர் தத்தாவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்கும் கொலிஜியம் மத்திய அரசுக்கு கடந்த செப்டம்பர் 26-ந் தேதி பரிந்துரைத்தது.

இந்த நிலையில் நீதிபதி தீபாங்கர் தத்தாவின் பெயரை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று முன்தினம் உத்தரவிட்டார். இவர் இந்த பதவியில் 2030-ம் ஆண்டு பிப்ரவரி 8-ந் தேதி வரை நீடிப்பார்.

இவர் கொல்கத்தா ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி மறைந்த சலீல் குமாரின் மகன் ஆவார்.

இதனையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் நேற்று பதவி ஏற்பு விழா நடந்தது. அவருக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அவருக்கு சக நீதிபதிகள் வாழ்த்து தெரிவித்தனா. இதன்மூலம் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு