தேசிய செய்திகள்

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பாக ஜோதிர் ஆதித்ய சிந்தியா போபால் திரும்புகிறார்

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பாக ஜோதிர் ஆதித்ய சிந்தியா போபால் திரும்புகிறார்.

தினத்தந்தி

போபால்,

மத்திய பிரதேச மாநில சட்டசபையில், முதல்-மந்திரி கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு இன்று (திங்கட்கிழமை) நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துகிறது.

காங்கிரசில் இருந்து விலகி பாரதீய ஜனதாவில் சேர்ந்து, மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் ஜோதிர் ஆதித்ய சிந்தியா டெல்லிக்கு சென்றிருந்தார். அவர், மாநில சட்டசபையில் இன்று நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பாக போபால் வந்து சேருகிறார். இதை அவரது தீவிர ஆதரவாளரான பங்கஜ் சதுர்வேதி தெரிவித்தார்.

ஜோதிர் ஆதித்ய சிந்தியா, மாநில சட்டசபையில் இருந்தும், காங்கிரஸ் கட்சியில் இருந்தும் விலகியுள்ள தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களை சந்தித்து பேசுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை