மும்பை,
தமிழகத்தின் முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் 5 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. ஜெயலலிதா நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுகவினர் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், பிரபல பாலிவுட் நடிகையும் தலைவி படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடித்தவருமான கங்கனா ரனாவத், நினைவு தினத்தை முன்னிட்டு ஜெயலலிதாவை நினைவுகூர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டகிராம் பதிவில், நினைவு தினமான இன்று அயர்ன் லேடியை (ஜெயலலிதா) நினைவு கூர்கிறேன் எனப்பதிவிட்டுள்ளார்.