தேசிய செய்திகள்

மாலியில் கடத்தப்பட்ட 5 இந்தியர்களை மீட்க வேண்டும்: நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி. கோரிக்கை

ஆப்பிரிக்க நாடான மாலியில் 2025 நவம்பர் 6ம் தேதி அன்று 5 இந்திய தொழிலாளிகளை, அவர்கள் தங்கியிருந்த முகாமிலிருந்து பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர்.

தினத்தந்தி

புதுடெல்லி,

ஆப்பிரிக்க நாடான மாலியில் கடத்தப்பட்ட 5 இந்தியர்களை மீட்டு வருவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று (3.12.2025) திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி. பேசியதாவது:

தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த 5 இந்திய தொழிலாளர்கள் (பொன்னுதுரை, புதியவன், பேச்சிமுத்து, இசக்கிராஜா, தளபதி சுரேஷ்) மாலியில் உள்ள ஒரு தனியார் மின் நிறுவனத்தில் கடந்த 6 மாதங்களாக வேலை செய்து வந்தனர். 2025 நவம்பர் 6ம் தேதி அன்று, அவர்கள் தங்கியிருந்த முகாமிலிருந்து பயங்கரவாதிகள் அவர்களை கடத்திச் சென்றனர். இதுவரை அவர்களது நிலை குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை.

அவர்களின் குடும்பத்தினர் மிகுந்த கவலையில் உள்ளனர்; அவர்கள் உயிருடன் உள்ளார்களா, அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதையும் அறிய முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களை மீட்டு, பாதுகாப்பாக இந்தியாவிற்கும், அவர்களின் குடும்பத்தினரிடமும் கொண்டு வருவதற்கு அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டுமென நான் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார். 

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு