தேசிய செய்திகள்

கர்நாடகத்தில் 4 பொறியியல் கல்லூரிகளில், கன்னட வழிக்கல்வி - மந்திரி அஸ்வத் நாராயண் தகவல்

கர்நாடகத்தில் 4 பொறியியல் கல்லூரிகளில், கன்னட வழிக்கல்வி அளிக்க முடிவு செய்துள்ளதாக மந்திரி அஸ்வத் நாராயண் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலத்தின் உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண் பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அண்டை மாநிலங்களில் தாய்மொழியில் பொறியியல் கல்வி கற்றலை அறிமுகம் செய்துள்ளனர். அதேபோல் கர்நாடகத்திலும் முதல் கட்டமாக 4 பொறியியல் கல்லூரிகளில் கன்னட மொழியில் கற்றலை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளோம்.

அதாவது பால்கியில் உள்ள பீமண்ணா கன்ரே தொழில்நுட்ப பல்கலைக்கழகம், சிக்பள்ளாப்பூரில் உள்ள எஸ்.ஜே.சி. தொழில்நுட்ப பல்கலைக்கழகம், மைசூரு மகாராஜா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், விஜயாப்புராவில் உள்ள பி.ஜி.ஹலஹட்டி என்ஜினீயரிங் கல்லூரி ஆகியவற்றில் கன்னடத்தில் என்ஜினீயரிங் படிப்பை கற்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி தலா 30 மாணவர்களுக்கு கன்னட வழியில் கற்பிக்கப்படும். தேசிய அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளை தான் நாங்கள் தேர்ந்தெடுத்துள்ளோம். இவ்வாறு அஸ்வத் நாராயண் கூறினார்.

பெண்களுடன் தனிமையில் இருந்து வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது

மனைவிக்கு பதிலாக கணவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு