தேசிய செய்திகள்

'கன்யா பூஜை' - சிறுமிகளின் கால்களை கழுவி பூஜை செய்த முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்..!

நவராத்திரி விழாவை முன்னிட்டு பெண் குழந்தைகளுக்கு கன்யா பூஜை செய்து உத்தபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் வழிபட்டார்.

தினத்தந்தி

லக்னோ,

இந்தாண்டு, நவராத்திரி விழா செப்டம்பர் 26-ம் தொடங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலங்களிலும் தனித்துவமான பூஜை சடங்குகளுடன் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. நவராத்திரியில் முக்கிய நிகழ்வாக துர்கா பூஜை பண்டிகை நேற்று வட மாநிலங்களில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

இந்த நிலையில், நவராத்திரிதியின் 9-வது நாளான இன்று உத்தரபிரதேசத்தின் கோரக்பூரில் உள்ள கோரக்நாத் கோவிலில் கன்யா பூஜை நடைபெற்றது. அதில் பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து வழிபடும் பூஜை நடைபெற்றது.

இந்த பூஜையில் அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டு, பெண் குழந்தைகளின் பாதங்களில் தண்ணீர் ஊற்றி, பொட்டு வைத்து பூஜை செய்தார். தொடர்ந்து இன்று மாலை நடைபெறும் விஜயதசமி பூஜையில் யேகி ஆதித்யநாத் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்