தேசிய செய்திகள்

சர்ச்சைக்குரிய பாஜக தலைவர் கபில் மிஸ்ராவுக்கு ”ஒய்” பிரிவு பாதுகாப்பு

சர்ச்சைக்குரிய பாஜக தலைவர் கபில் மிஸ்ராவுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

டெல்லியில் நடந்த வன்முறைக்கு, பாஜக தலைவர் கபில் மிஸ்ராவின் சர்ச்சை பேச்சுதான் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. கபில் மிஸ்ரா மீது முதல் தகவல் அறிக்கை ( எப்.ஐ.ஆர்) பதிவு செய்ய வேண்டும் என்று எதிர்கட்சிகள் நெருக்கடி கொடுத்து வருகின்றன. கபில் மிஸ்ரா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்திலும் முறையிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கபில் மிஸ்ராவுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. கபில் மிஸ்ராவுக்கு எதிராக தொடர்ந்து அச்சுறுத்தல்கள் வருவதால், அவருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒய் பிரிவு பாதுகாப்பு மூலம் கபில் மிஸ்ராவுக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது