தேசிய செய்திகள்

கௌரி லங்கேஷ் போலிஸ் பாதுகாப்பு கோரவில்லை - முதல்வர் சித்தராமையா

சுட்டுக்கொல்லப்பட்ட பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் போலிஸ் பாதுகாப்பு கோரவில்லை என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறினார்.

மைசூரு

மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் சமீபத்தில் மாநில அரசு போலிஸ் பாதுகாப்பை அளிக்கவில்லை என்று குற்றஞ்சாட்டியிருந்தார். இதனை கண்டித்துள்ள முதல்வர், மத்திய அமைச்சர் கர்நாடக அரசு கௌரிக்கு அச்சுறுத்தல் இருப்பதை நன்கு அறியும் என்றும், கௌரி பாதுகாப்பு கேட்டதாகவும் ஆனால் மாநில அரசு கொடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார். இது மிகவும் பொறுப்பற்ற முறையில் அதுவும் சட்ட அமைச்சரால் கூறப்பட்டுள்ளது என்றார்.

பிரசாத் செப்டம்பர் 8 ஆம் தேதியன்று கௌரியின் சகோதரர் இந்திரஜித் அவர் நக்சலைட்டுகள் சரணடைவதற்காக பணியாற்றி வந்துள்ளார் என்றும், சித்தராமையா அரசு அவருக்கு பாதுகாப்பு அளிக்கவில்லை என்றும் கூறியுள்ளதாகவும் அதற்கு ஆதாரமாக சில செய்திப் பிரதிகளை காட்டியுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள சித்தராமையா அரசு யார் கேட்டாலும், பாதுகாப்பு வழங்கும் என்றும் ஆனால் கௌரிக்கு இருந்த அச்சுறுத்தல் குறித்து தெரியாது. அவர் அது பற்றி பேசவில்லை என்றார் அவர்.

கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த அவர் முற்போக்கு சிந்தனையாளர் கல்புர்கி கொலை தொடர்பான விசாரணையில் முன்னேற்றம் இல்லாமல் இல்லை என்றார். கர்நாடக, மராட்டிய காவல்துறையினர் சிந்தனையாளர்களின் கொலைகளில் தொடர்ச்சியாக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர் என்றார் சித்தராமையா.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...