கோப்புப்படம்  
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் அனைத்து வகையான தேர்வுகளிலும் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதி

கர்நாடகாவில் அனைத்து வகையான தேர்வுகளிலும் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, அம்மாநில கல்வித்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

பெங்களூரு,

கர்நாடக மாநிலத்தில் அனைத்து வகையான தேர்வுகளிலும் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, அம்மாநில கல்வித்துறை மந்திரி சுதாகர் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில், முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில், ஆலேசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக கல்வித்துறை மந்திரி சுதாகர், கர்நாடக மாநிலத்தில் பள்ளி கல்லூரி தேர்வுகளில் மட்டுமின்றி அனைத்து போட்டித் தேர்வுகளிலும் மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே மாணவிகள் ஹிஜாப் அணிந்து நீட் தேர்வு எழுத மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது என்றும், எனவே, காங்கிரஸ் அரசு எடுத்துள்ள முடிவு எந்த விதத்திலும் தவறு கிடையாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஹிஜாப்புக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், இதனை கண்டித்து மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக இந்துத்துவா அமைப்புகள் தெரிவித்துள்ளன.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்