பெங்களூரு,
கர்நாடக முதல்வர் எடியூரப்பா மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் ஆகியோர் பேரிடர் மேலாண்மை குழுவினருடன் ஆலேசனை நடத்தினர். இதில், மக்கள் அதிக அளவில் ஒன்று கூட அனுமதி வழங்கினால் அது கொரோனா தொற்றை அதிகரிக்க வழிவகுக்கும் என்று பேரிடர் மேலாண்மை குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதனை ஏற்று, பொது இடங்களில் மக்கள் ஒன்று கூடி புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட தடை விதிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், புத்தாண்டு கெண்டாட்ட கட்டுப்பாடுகள் குறித்து விரைவில் அரசாணை வெளியாகும் என அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார்.