தேசிய செய்திகள்

ஓட்டுக்கு தலா ரூ.6 ஆயிரம் கொடுப்பதாக பேச்சு: கர்நாடக முதல்-மந்திரி மீது போலீசில் காங்கிரஸ் பரபரப்பு புகார்

ஓட்டுக்கு தலா ரூ.6 ஆயிரம் கொடுப்பதாக பேசியதாக கர்நாடக முதல்-மந்திரி மீது போலீசில் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.

தினத்தந்தி

பெங்களூரு,

கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் முதல் வாரத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் பா.ஜனதா கட்சியை சோந்த முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி எம்.எல்.ஏ., கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசும்போது, இந்த தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற வேண்டும் என்றும், அதற்காக ஒரு ஓட்டுக்கு தலா ரூ.6 ஆயிரம் வழங்கலாம் என்றும் கூறினார். இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உள்ளிட்ட அக்கட்சியின் முன்னணி தலைவர்கள் நேற்று பெங்களூரு ஹைகிரவுண்ட்ஸ் போலீஸ் நிலையத்திற்கு சென்று, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மற்றும் ரமேஷ் ஜார்கிகோளி ஆகியோர் மீது பரபரப்பு புகார் அளித்தனர்.

அதில் வாக்காளர்களுக்கு தலா ரூ.6 ஆயிரம் பணம் கொடுக்க தயாராக இருப்பதாக கூறியிருப்பது சட்டவிரோதமானது என்று கூறியுள்ளனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது