தேசிய செய்திகள்

கர்நாடகாவில் ஜூன் 14 ஆம் தேதி 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடக்கம்

கர்நாடகாவில் ஜூன் 14 ஆம் தேதி 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

பெங்களூரு,

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாகக் கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. தொற்று பாதிப்பு குறையத் தொடங்கியதையடுத்து படிப்படியாக கல்வி நிலையங்களை மாநில அரசுகள் திறந்து வருகின்றன. அந்த வகையில், கர்நாடகாவில் கடந்த நவம்பர் 18- ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்பட்டன.

அதேபோல 10 மற்றும் 12-ம் ஜனவரி 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு இயங்கி வருகின்றன. இந்த நிலையில், பொதுத்தேர்வுகளுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 12-ம் வகுப்புத் தேர்வுகள் மே மாதம் இரண்டாவது வாரத்திலும் 10-ம் வகுப்புத் தேர்வுகள் ஜூன் முதல் வாரத்திலும் தொடங்கும் என்று அரசு அறிவித்தது.

'ஏஎன்ஐ' செய்தி நிறுவனத்திடம் பேசிய கர்நாடக மாநில் தொடக்க மற்றும் இடைநிலைக் கல்வித்துறை அமைச்சர் சுரேஷ் குமார், ''10-ம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் ஜூன் 14-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி முடிவடைகின்றன என்றார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு