தேசிய செய்திகள்

கர்நாடக சட்ட மேலவை உறுப்பினர் இடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் ஜெகதீஷ் ஷெட்டர் வேட்புமனு தாக்கல்

சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமார் ஆகியோருடன் வந்து காங்கிரஸ் வேட்பாளர் ஜெகதீஷ் ஷெட்டர் வேட்புமனு தாக்கல் செய்தார்.

பெங்களூரு,

2023 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக கர்நாடக சட்ட மேலவை உறுப்பினர்கள் 3 பேர் ராஜினாமா செய்ததால், அந்த பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதற்கான இடைத்தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் வேட்பாளராக ஜெகதீஷ் ஷெட்டர் போட்டியிட காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே ஒப்புதல் அளித்தார்.

மேலும், திப்பண்ணப்பா கமக்னூர் மற்றும் என்.எஸ். போசராஜு ஆகியோரும் காங்கிரஸ் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா மற்றும் துணை முதல்-மந்திரி டி.கே.சிவகுமார் ஆகியோருடன் வந்து தலைமைச் செயலாளர் விசாலாட்சியிடம் ஜெகதீஷ் ஷெட்டர் வேட்புமனு தாக்கல் செய்தார்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை