தேசிய செய்திகள்

கர்நாடக தேர்தலில் களமிறங்கும் கோடீசுவர வேட்பாளர்கள்

கர்நாடக தேர்தலில் களமிறங்கும் எம்.டி.பி. நாகராஜுக்கு ரூ.1,510 கோடி, டி.கே.சிவக்குமாருக்கு ரூ.1,347 கோடி சொத்துகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை தோதலையொட்டி தற்போது வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. நேற்று நகராட்சி நிர்வாகத்துறை மந்திரி எம்.டி.பி.நாகராஜ் ஒசக்கோட்டை தொகுதியில் பா.ஜனதா சார்பில் வேட்புமனு தாக்கல் செய்தார். அந்த மனுவுடன் தனது சொத்து விவரங்கள் அடங்கிய பிரமாண பத்திரத்தையும் தாக்கல் செய்துள்ளார். இதில் அவரின் சொத்து மதிப்பு ரூ.1,510 கோடி என்று காட்டியுள்ளார்.

கடந்த 2019-ம் ஆண்டு சட்டசபை இடைத்தேர்தலில் அவர் போட்டியிட்டார். அப்போது அவரது சொத்து மதிப்பு ரூ.1,015 கோடியாக இருந்தது. கடந்த 4 ஆண்டுகளில் அவரது சொத்து மதிப்பு ரூ.495 கோடி அளவுக்கு உயர்ந்துள்ளது.

இதுபோல் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் நேற்று கனகபுராவில் வேட்புமனு தாக்கல் செய்தார். அவரது வேட்புமனுவுடன் சொத்து விவரங்கள் அடங்கிய பிரமாண பத்திரத்தில் அவருக்கும், அவரது மனைவிக்கும் சோத்து சுமார் ரூ.1,347 கோடி சொத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அவரது மனைவி பெயரில் ரூ.133 கோடி சொத்துக்கள் உள்ளன. மீதமுள்ள சொத்துகள் டி.கே.சிவக்குமார் பெயரில் உள்ளன. கடந்த 2018-ம் ஆண்டு அவரது சொத்து மதிப்பு ரூ.840 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 5 ஆண்டுகளில் அவரது சொத்து மதிப்பு ரூ.507 கோடி அளவுக்கு உயர்ந்துள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்