தேசிய செய்திகள்

ஒமைக்ரான் பாதித்த 2 நபர்கள் பற்றி கர்நாடக மந்திரி விளக்கம்

கர்நாடகாவில் ஒமைக்ரான் பாதித்த இருவரில் ஒருவர் மருத்துவர் என்று மாநில சுகாதார துறை மந்திரி கே. சுதாகர் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

பெங்களூரு,

இந்தியாவின் கர்நாடகாவில் 2 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனை மத்திய சுகாதார அமைச்சகம் இன்று உறுதிப்படுத்தி உள்ளது. அவர்களில் ஒருவர் 66 வயது ஆண். மற்றொருவர் 46 வயது ஆண் ஆவார்.

இந்த நிலையில், ஒமைக்ரான் பாதித்த 46 வயது நபருடன் தொடர்புடைய 5 பேர் அடையாளம் காணப்பட்டு அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்துதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.

இதுபற்றி மாநில சுகாதார துறை மந்திரி கே. சுதாகர் இன்று கூறும்போது, பெங்களூருவில் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட 46 வயது நபர் ஒரு மருத்துவர். உடல் சோர்வு, உடம்பு வலி மற்றும் லேசான காய்ச்சல் இருந்துள்ளது. இதனையடுத்து, அவர் தாமாகவே பரிசோதனை மேற்கொண்டு தனிமைப்படுத்தி கொண்டார்.

அவரது பரிசோதனை முடிவுகளில் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் எந்த பயணமும் மேற்கொள்ளவில்லை. மருத்துவருடன் தொடர்பிலிருந்த நபர்களில் 5 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, மொத்தம் 6 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எவருக்கும் எவ்விதத் தீவிர அறிகுறியும் தென்படவில்லை. அவர்கள் அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள். 66 வயதுடைய மற்றொரு நபர் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர். அவர் நாடு திரும்பிவிட்டார் என்று கூறியுள்ளார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்