தேசிய செய்திகள்

கர்நாடகாவில் இன்று ஒரேநாளில் 7,034 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்

கர்நாடகாவில் இன்று ஒரேநாளில் 7,034 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தினத்தந்தி

பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் ருத்ரதாண்டவமாடி வருகிறது.இங்கு தினமும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், கர்நாடக மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மாநிலம் முழுவதும் இன்று ஒரேநாளில் அதிகபட்சமாக 7,034 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,12,633 ஆக அதிகரித்துள்ளது.

கர்நாடகாவில் இன்று மேலும் 7,883 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,96,494 ஆக அதிகரித்துள்ளது.

மாநிலத்தில் இன்று ஒரேநாளில் இன்று மேலும் 113 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,510 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது வரை மாநிலத்தில் 80,343 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்