பெங்களூரு,
கர்நாடகத்தில் கொரோனாவின் 3-வது அலை பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.
இந்நிலையில், கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,894 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 39,31,536 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு மேலும் 24 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39,715 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 5,418 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 38,68,501 ஆக அதிகரித்துள்ளது.
கர்நாடக மாநிலம் முழுவதும் தற்போது வரை 23,284 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.